நாளை ரிலீசாகும் ஒரே நாள் இரவில் நடந்து முடியும் கதை அருள்நிதியின் “இரவுக்கு ஆயிரம் கண்கள்” !

அருள்நிதி, அஜ்மல், மகிமா நம்பியார், வித்யா, சுஜா வாருனி நடித்துள்ள படம், “இரவுக்கு ஆயிரம் கண்கள்”. மாறன் இயக்கியுள்ளார்.  இது நான் நடித்துள்ள 10வது படம்.

நாளை ரிலீசாகும்  இந்தப் படம் குறித்து அருள்நிதி கூறியதாவது:-

தொடர்ந்து நான்  வித்தியாசமான கதையுள்ள  படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன். ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப்  பிடிக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில்,  கால்டாக்ஸி டிரைவர் கதாப்பாத்திரம்  ஏற்றுள்ளேன். இதில் நான் திடீரென்று ஒரு பிரச்னையில் சிக்கித் தவிக்கிறேன், அதிலிருந்து எப்படி மீண்டு வெளியே வருகிறேன் என்பது தான் கதை. இக்கதை ஆக்‌ஷனுடன் கூடிய கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. படம்  முழுவதும் யாரும் எதிர்பார்க்காத பல திடுக்கிடும் திருப்பங்கள் இருக்கும்.  ஒருநாள் இரவில் நடந்து  முடியும் கதை என்பதால், இரவு நேரங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது.

Leave a Response