விவசாயிகளின் நலனே எங்களின் முன்னுரிமை-பிரதமர் மோடி..!

பெங்களூரு: விவசாயிகள் நலனுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நமோ ஆப் வழியாக விவசாயிகள் மத்தியில் மோடி பேசியதாவது:

பா.ஜ., விவசாயிகளுக்கான கட்சி. மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் விவசாயிகளின் பட்ஜெட். விவசாயிகளின் நலனே எங்களின் முன்னுரிமை. இதற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் விவசாய துறைக்கு 14 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர்களின் நலனை காங்கிரஸ் புறக்கணித்தது. வெறும் வாய் வார்த்தைகளில் மட்டுமே அக்கட்சி நம்பிக்கை வைத்துள்ளது. மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயிகள் மத்தியில் வேறுபாடு காட்டியது. மத்திய அரசின் நலத்திட்டங்கள் விவசாயிகளை சென்றடையவில்லை. விவசாயிகள் நலனில் எடியூரப்பா கவனம் செலுத்துவார். அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

Leave a Response