காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம்: கர்நாடகாவில் 12ஆம் தேதி ஸ்டிரைக்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வரும் 12ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29ஆம் தேதியுடன் முடிந்த பின்பும் வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இதனைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு எதிராகவும் கர்நாடக மாநிலத்தில் வரும் 12ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்த சல ஒளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Response