கர்நாடகத்தில் “காலா”வுக்கு தடை : காவேரி சம்மந்தமாக ரஜினி வந்தால், நாங்கள் பேச தயார்-கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் பிரத்தியேக பேட்டி…

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் காலா. இந்த படம் வரும் ஜூன் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

காவிரி விவகாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஆதரவாக பேசியதால் கர்நாடகாவில் அவருக்கு பலத்த எதிர்ப்பு நிலவியது. காலா படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என சமூக ஆர்வலர் வட்டாள் நாகராஜும் மற்றும் சில அமைப்புகளும் கூறி வந்தன.

இந்த நிலையில் நமது செய்தியாளர் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்து-விடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது வட்டாள் நாகராஜ் மட்டும் அல்லாது ஒட்டுமொத்த கர்நாடக மக்களும் காலா படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ரஜினிகாந்த் தனது நண்பர் எனவும்.காவிரி நீர் பிரச்னையில் தலையிடுவதனால் தான் இந்த பிரச்சனை வருகிறது எனவும் தெரிவித்தார்.

தற்போது கர்நாடகாவில் காலா படத்திற்கு தடைவிதித்திருக்கும் வேளையில் ரஜினிகாந்த் அல்லது காலா தயாரிப்பாளர் யாராவது உங்களை தொடர்பு கொண்டு பேசினார்களா என கேள்வி எழுப்ப அதற்க்கு சா.ரா.கோவிந்து தாங்கள் அதற்கான முயற்சிகள் இதுவரை எதுவும் எடுக்கவில்லையென்றும், ரஜினிகாந்த் தரப்பிலோ அல்லது ‘காலா’ திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பிலோ யாரும் அவர்களை இதுவரை தொடர்புகொள்ளவில்லை எனவும் கோவிந்து தெரிவித்தார்

காவேரி விவகாரம் சம்மந்தமாக ரஜினிகாந்த் அவர்கள் கர்நாடகாவிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், ரஜினி அவர்களிடம் பேச தயாராக உள்ளீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆதற்கு பதிலளித்த சா.ரா.கோவிந்த், அதற்க்கு தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

கர்நாடகத்தில் ‘காலா’ ரிலீஸ் ஆகிறதா இல்லையா என பொறுத்திருந்து பார்போம்….

Leave a Response