தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால் தற்போது ‘பாரீஸ் பாரீஸ்’ படத்தில் நடித்து வரும் நிலையில், அவர் வித்தியாசமான கதைகளில் நடிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். பிரபல நாயகர்கள் அனைவருடனும் நடித்திருக்கிறார்.
காஜல் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் வெற்றிபெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கு திரை உலகில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் காஜல் நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் ‘விவேகம்’ விஜய்யின் ‘மெர்சல்’ படங்களும், தெலுங்கில் ‘கைதி எண்150’, ‘நேனா ராஜு நேனே மந்திரி’ படங்களும் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் தெலுங்கில் ‘அவே’, `எம்.எல்.ஏ’ உள்ளிட்ட தெலுங்கு படங்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது ‘குயின்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆன ‘பாரீஸ் பாரீஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்து காஜல் அகர்வால் கூறும்போது,
“ இனி மாறுபட்ட வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். ஒரே மாதிரியான படங்களில் நடித்து போரடித்து விட்டது. எனவே, வித்தியாசமான கதைகளில் அதிகமாக நடிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.காஜல் அகர்வால்