‘அட்டகத்தி’ நந்திதா மூன்று மொழிகளில் மிரட்ட வரும் “ஐபிசி 376”..!

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார் ‘அட்டகத்தி’ நந்திதா.

ஆனால் இன்றைக்கும் ‘அட்டகத்தி’ என்றால் தான் அவரை ரசிகர்களுக்கு ஞாபகம் வருகிறது. இருந்தாலும் வந்த வாய்ப்புகளை விட மனசில்லாமல் நடித்துக் கொண்டிருந்தவர் இனி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பது என்று நயன்தாரா வழியில் கோதாவில் இறங்கி விட்டார்.

அந்த வரிசையில் நந்திதா முதல்முறையாக போலீஸ் உடையில் ஆக்‌ஷன் கதாநாயகியாக அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் ‘ஐபிசி 376’.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் இப்படம் சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், காமெடி எல்லாம் கலந்த கமர்ஷியல் த்ரில்லர் படமாம். படம் முழுக்க ஆக்‌ஷன் நிரம்பியிருக்கும் என்பதால் சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்பராயன் அமைக்கிறார்.

“இது ஹீரோக்கள் பண்ண வேண்டிய கதை. ஆனா ஹீரோக்கள் பண்ண முடியாத கதை. இப்ப சமூக வலைதளங்கள் தான் பரபரப்பா இயங்கிக்கிட்டிருக்காங்க. டைட்டிலை வலைதளத்தில் தேடும்போதே இது எது சம்பந்தமான கதை என்பதை யூகித்து விடுவார்கள். ஆனால் என்ன கதை என்பதை யூகிக்க முடியாது.

பெண்களை இழிவுபடுத்தி வந்து கொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இது பெண்கள் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும். த்ரில்லர், சஸ்பென்ஸ் என்பதையும் தாண்டி யூகிக்க முடியாத இன்னொரு விஷயமும் படத்தில் ஹைலைட்டாக இருக்கும்” என்றார் இயக்குனர் ராம்குமார் சுப்பாராமன்.

Leave a Response