மீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவன் என்றால் அது வடிவேலு தான். நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் வடிவேலு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வைகைப்புயல் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் வடிவேலு, தனது நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளார். இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன் உள்ளிட்ட சில படங்களிலும் காமெடி காநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
கடந்த 2015ல் நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்த எலி என்ற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து, கத்திச்சண்டை, ஷிவலிங்கா, மெர்சல் ஆகிய படங்களில் இவர் நகைச்சுவை வேடமேற்று நடித்தார். இந்நிலையில், நான்கு வருடங்கள் கழித்து, தற்போது மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார் வடிவேலு.
டைரக்டர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், பேய் மாமா என்ற படத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கிறார். இதன் முதல் பார்வை போஸ்டர் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.