அமெரிக்காவில் மாஸாக ரிலீஸாகும் சர்கார்..!

விஜய் நடிப்பில் சர்க்கார் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளன. தீபாவளிக்கு ஸ்பெஷல் ரிலீஸாக உலகம் முழுக்க வரவுள்ளது. ரஹ்மான் இசையில் பாடல்களும் ட்ரெண்டாகிவிட்டது.

முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகிபாபு என பலர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வரும் நவம்பரில் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே மெர்சல் படம் அதிரிந்தி என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் முருகதாஸின் இயக்கத்தில் வந்த ஸ்பைடர் படம் ரசிகர்களை ஈர்த்தது. இதனால் சர்க்கார் படம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழில் மட்டுமின்றி, தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ‘சர்கார்’ ரிலீஸாக இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய இருக்கின்றனர்.

Leave a Response