‘காலா’ ரிலீஸுக்குப் பிறகு ‘விஸ்வரூபம் 2’ ..!

‘காலா’ ரிலீஸுக்குப் பிறகு ‘விஸ்வரூபம் 2’ படத்தை ரிலீஸ் செய்ய கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

‘விஸ்வரூபம்’ படத்தின் தொடர்ச்சியாக ‘விஸ்வரூபம் 2’ படத்தை இயக்கி, நடித்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் சவுண்ட் மிக்ஸிங்கை அமெரிக்காவில் முடித்த கமல்ஹாசன், சென்சாருக்கும் அனுப்பி ‘யு/ஏ’ சான்றிதழ் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

படத்தின் டிரெய்லரைத் தயார் செய்துவிட்ட கமல்ஹாசன், தயாரிப்பாளர் சங்கத்தின் பிரச்சினை முடியும் என்று காத்திருக்கிறாராம். வேலை நிறுத்தம் முடிந்ததும் டிரெய்லரை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் கமல்ஹாசன், ‘காலா’ ரிலீஸுக்குப் பிறகு படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.

Leave a Response