நோய் பரவுவதை குறைக்க நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிப்பது மிகவும் அவசியமாகும். எனவே நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க, கொதிக்கும் நீரில், துளசி மற்றும் மஞ்சளை கலந்து தினமும் குடித்து வர வேண்டும்.
* துளசி கலந்த இந்த மூலிகை பானத்தை குடிப்பதால், நுரையீரலில் ஏற்படும் அழற்சி மற்றும் சளியின் தேக்கத்தை குறைத்து, அதிகப்படியான சளித் தொல்லையில் இருந்து நம்மை விடுவிக்கிறது.
* இயற்கையான இந்த மூலிகை பானத்தில், மஞ்சள் மற்றும் துளசியை கலந்துக் குடிப்பதால், சுவாசப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்து, ஆஸ்துமா நோய் வராமல் பாதுகாக்கிறது.
* மன அழுத்தம் இருப்பவர்கள், தினமும் இந்த மூலிகை பானத்தைக் குடித்து வந்தால், மன அழுத்தம் குறைந்து, மூளையில் சீரான ரத்தோட்டம் நடைபெறும்.
* மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், இந்த துளசி பானத்தை தினமும் குடித்து வந்தால், நமது உடலின் குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது.
* அசிடிட்டி மற்றும் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் இந்த மஞ்சள் கலந்த பானத்தை குடிப்பதால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
* துளசி மற்றும் மஞ்சள் கலந்த மூலிகை பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை, தலைவலி, புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.