தமிழ்நாடு திரையரங்குகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்…

63db5fa1-aff2-4d31-aca6-291fbfb3a859

இன்று மலை திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு விதித்த GST  வரியும், மாநில அரசு விதித்த 8% கூடுதல் வரி விதிப்பின் காரணமாக எங்கள் திரையரங்கங்கள்  நஷ்டம் எற்பட்டு தொழிலை தொடர்ந்து நடத்த இயலாத நிலை எற்பட்டுள்ளது எனவும்,

திரையரங்குகளில் தற்போது நடைமுறையில் உள்ள கட்டிட உறுதி சான்றிதழ் முன்பு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரும் முறையில் இருந்து, தற்போது ஒரு வருடத்திற்கு ஒரு முறை வாங்க வேண்டியுள்ளது . அகவே எங்களுக்கு புதிய திரையரங்குகளுக்கு ஐந்து வருடத்திற்கும் எற்கனவே உள்ள திரையரங்குகளுக்கு மூன்று வருடத்திற்கு ஒரு முறையும் , கட்டிட உறுதி சான்றிதழ் அளிக்க வேண்டும் என அரசை கேட்டு கொள்கிறோம் எனவும்.

தற்போது நடை பெற்று வரும் பெரிய திரையரங்கை மாற்றி சிறிய திரையரங்குகளாக மாற்ற எளிய முறையில் அரசு அனுமதி வழங்க வேண்டியும்.

திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலங்களில் உள்ளது போல AC திரையரங்களுக்கு 5 ரூபாயும் AC அற்ற திரையரங்கங்களுக்கு 3 ரூபாயும் தந்து உதவும் படி அரசை வலியுறுத்தியும்.

அணைத்து திரையரங்குகளும் டிஜிட்டல் முறையில் படம் திரையிடுவதால் , ஆப்பரேட்டர் லைசென்ஸ் முறையை முழுமையாக ரத்து செய்து தருமாறு அரசை கேட்டு கொண்டு.

 திரையரங்குகளை தொடர்ந்து இயக்க முடியாத காரணத்தால், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் வருகின்ற மார்ச் 16 ஆம் தேதி (அதாவது நாளை) முதல் இயங்காது என்பதை தெரிவித்து கொள்கிறோம் ..

கலவரையின்றி இயங்காது என்றும் தெரிவித்து கொள்கிறோம் … என கூறியுள்ளனர்

Leave a Response