படம் பெரும் நஷ்டம்! சிக்கலில் தயாரிப்பாளர்!!

Gnanavelraja 2
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ், நடிப்பில் பொங்கல் விடுமுறையில் வெளிவந்த திரைப்படம் “தானா சேர்ந்த கூட்டம்”. இப்படத்தை ‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்தார். இப்படத்தினை தயாரிப்பு நிறுவனம், திருச்சியை சேர்ந்த ‘பரதன் பிலிம்ஸ்’ நிறுவனத்திற்கு வெளியீட்டு உரிமையை ரூ.32 கோடிக்கு விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

பொங்கல் விடுமுறை காலத்தில் வெளிவந்த படமாக இருந்தாலும், இப்படத்துக்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பு கிடைக்கப்பெறவில்லை. இப்படத்தின் வசூல் பற்றி விசாரிக்கையில், நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்வது ரூ.22 கோடி மட்டுமே வசூல் என்கிறது. அப்படி பார்த்தால், இப்படத்தை வாங்கிய ‘பரதன் பிலிம்ஸ்’ நிறுவனத்திற்கு இப்படம் சுமார் ரூ.10 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இப்படம் சிறு நஷ்டம் ஏற்படுத்திருந்தால் வாங்கியவர் சற்று பொறுமையை கடைப்பிடித்து தயாரிப்பாளரிடம் நடந்திருப்பார். ஆனால் நாம் கேள்விப்பட்ட விஷயமோ இப்படம் மூன்றில் ஒரு பங்கு என்ற சதவிதத்தில் “தானா சேர்ந்த கூட்டம்” திரைப்படம் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாம். எனவே இப்படத்தை வாங்கிய ‘பரதன் பிலிம்ஸ்’ நிர்வாகிகள் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டமான ரூ.10 கோடியை உடனடியாக கொடுக்கும்படி ‘ஸ்டூடியோ கிரீன்’ உரிமையாளர் கே.ஈ.ஞானவேல்ராஜாவை வலியுறுத்துவதாக கோடம்பாக்கம் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
Gnanavelraja
படத்தை வாங்கிய ‘பரதன் பிலிம்ஸ்’ கொடைச்சல் காரணமாக ஞானவேல்ராஜா அவர்கள் இரு தினங்களுக்கு முன்பு திருச்சி சென்று பரதன் பிலிம்ஸ் உரிமையாளர்களை சந்தித்து அடுத்த படத்தில் இப்படத்தின் நஷ்டத்தை செட்டில் செய்வதாக கூறியுள்ளாராம். ஞானவேல்றாஜாவின் கெஞ்சலை சற்றும் பொருட்படுத்தாமல், பரதன் பிலிம்ஸ் நிறுவனம் நஷ்ட பணத்தில் பாதியையாவது இன்னும் சில தினனகளில் கொடுத்தாகவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளதாக கோடம்பாக்கம் வட்டார செய்திகள் சொல்கின்றன.

செய்தி என்னமோ உண்மை என்று தான் சொல்லப்படுகிறது, ஆனால் அந்த பைனான்சியரை போல் இங்கு இந்த தயாரிப்பாளருக்கு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ எதுவும் இல்லையாம்.

Leave a Response