மன்னர் வகையறா.. காமெடி வகையறா.. திரை விமர்சனம்..

pic

மூன்று குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பாசம், மோதலை காமெடி கலாட்டாவாக சொல்லிய படம். பிரபுவுக்கு கார்த்திக், விமல் என இரண்டு மகன்கள். இருவரும் ஜெயப்பிரகாஷ் – சரண்யா தம்பதிகளின் இரு மகள்களையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலிக்கின்றனர். பிரபுவின் ஊரில் இறால் பண்ணை நடத்தி வந்த, சரண்யாவின் அண்ணன் மகனை விமல் அடித்துவிடுகிறார். அவரை பார்க்க வரும் சரண்யா குடும்பத்தினர் மூத்த மகளை, தனது அண்ணனின் 2வது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.

காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் என்பதை தாங்கிக் கொள்ளாமல், பிரபுவின் மூத்த மகன் கார்த்திக் மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயல்கிறார். அண்ணனுக்காக மணமகளை கடத்தி வந்து திருமணம் செய்து வைக்கிறார், விமல். இதனால், விமலின் காதலிக்கு அதே மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். விமல் என்ன செய்தார்? அவர் காதல் கைகூடியதா என்பதுதான் கதை.

ரோபோ சங்கர், சிங்கம்புலி இருவரும் பட்டாசு கொளுத்துகிறார்கள் காமெடியில். இவர்கள் இருவரைத் தவிர, இரண்டு காட்சிகளில் வந்தாலும் தன்னை நிரூபிக்கிறார் யோகி பாபு. படத்திற்கு கதைக்கேற்றவாரு காட்சிகளை அமைத்த விதம் நன்று. நடித்தவர்கள் அனைவரும் இயல்பான நடிப்பு.
காமெடி தான் கலர்ஃபுல். ரோபோ சரியான கவுண்டர். கல்லூரி மாணவியாக வரும் ‘அழகான வாயாடி’ ஆனந்தி ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.

மொத்தத்தில் மன்னர் வகையறா. காமெடி வகையறா. மனம் நிறைவு.

Leave a Response