சி.ஏ. படிப்பில் ஜெயிப்பது சிம்பிள் ! ஸ்ரீ சங்கரா கோச்சிங் சென்டர் ஆடிட்டர் நாகராஜன் !

17

இந்த சிஏ படிப்பு பற்றிய அச்சம் மாணவர்களிடம் இருக்கிறது. அது தேவையில்லாதது. அது புரிதல் இல்லாததால் வருகிற தவறான எண்ணமும் கூட.
சி.ஏ பாஸ் செய்வது வெரி சிம்பிள். அதற்காக ஆகும் செலவும் சாதாரண வகையிலான செலவுதான். தமிழ்நாட்டில் ஒரு பிளாட்பாரத்தில் கீரை வியாபாரம் செய்யும் ஏழைப் பெண்மணியின் மகள் கூட சி.ஏ. பாஸ் செய்து ஒரு பெரிய கம்பெனியில் நல்ல நிலையில் இருக்கிறார்.
இரண்டு ஆண்டுகள் முன்பு மும்பையில் ஒரு ஆட்டோக்காரரின் மகள் சி.ஏ. முடித்து இன்று பெரிய அளவில் இருக்கிறார்.

சி.ஏ படிப்பு கடினம் என்கிறார்களே ? கடினமா? சுலபமா?

அதன் அடிப்படையைப் புரிந்து கொண்டால் சுலபம். சரியான தயாரிப் போடு தேர்வை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் மனப்பாடக் கல்வி முறை போன்றதல்ல இந்தப் படிப்பு . அடிப்படையை ,கான்சப்டைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். புரிந்து கொண்டு விட்டால் எல்லாம் சுலபம். எப்படி 10 ஆம் வகுப்பு படித்து விட்டு ப்ளஸ் டூ தேர்வு எழுத முடியாதோ அது போல தயாராக இல்லாமல் தேர்வை எழுத முடியாது. சி.ஏ. படிப்பில் மூன்று நிலைகள் உள்ளன. 1பவுண்டேஷன், 2. இன்டர் மீடியட், 3 பைனல் என 3 வகைப்படும்.அதாவது அடிப்படை நிலை, இடைநிலை , இறுதி நிலை என்று மூன்று நிலைகள் உள்ளன.

ப்ளஸ் டூ முடித்த எவரும் அடிப்படை நிலைத் தேர்வுகளை எழுதலாம் .பட்டப் படிப்பு முடித்தவர்கள் இன்டர்மீடியட் எழுதலாம் .மூன்றாம் நிலையின் போது ஒரு ஆடிட்டரிடம் பணியாற்றி செயல்முறை அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் .இந்தச் செய்முறை அனுபவம் இருந்தால் தான் மூன்றாம் நிலைத் தேர்வுகளை வெற்றிகரமாக எழுத முடியும். ப்ளஸ் டூ மதிப்பெண்ணைப் பொறுத்தவரை மருத்துவம் , பொறியியல் படிப்புக்கு இருப்பதைப் போல மதிப்பெண் முன்னுரிமை இங்கு தேவையில்லை. அதற்குரிய நீட் , ஐ ஐடி தேர்வுகள் எதுவும் சி.ஏ.க்குத் தேவையில்லை. ப்ளஸ் டூவில் 40 சதவிகிதம் மதிப்பெண் எடுத்தவர்கள் கூட சி.ஏ படிக்க முடியும். முயற்சியும் பயிற்சியும் மட்டும் இருந்தால் போதும்..

தமிழ் மட்டுமே தெரிந்தவர்களும் இன்று சி.ஏவில் வெற்றி பெற்றுள்ளனர். இதே போல மலையாளம் , தெலுங்கு , இந்தி மொழி மட்டும் தெரிந்தவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.இது தவறான எண்ணம். கணக்கில் சுமாரானவர்கள் ,அக்கவுண்டன்சி தெரியாதவர்கள் கூட சரியான பயிற்சியுடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும்.மெடிக்கல் என்று போனால் குறைந்தது 25 முதல் 50 லட்சம் செலவாகும். சிஏக் கு அதிகபட்சம் ஒன்றரை லட்சம் தான் செலவாகும். மூன்றாவது நிலையில் உதவியாளராகப் பயிற்சி பெறும் போதே ஆடிட்டர் உதவித் தொகை வர ஆரம்பித்து விடும். எனவே அதிக செலவு என்பதற்கு இதில் இடமே இல்லை.
இதற்குரிய வேலை வாய்ப்பு எதிர்காலம் எப்படி ?
ஒவ்வொரு படிப்பிலும் வேலை வாய்ப்பின் தேவைக்கு அதிகமாகவே படித்தவர்கள் உள்ளனர். இதில் நம் நாட்டில் 9 லட்சம் பேர் தேவை. ஆனால் இருப்பதோ இரண்டரை லட்சம் பேர் தான் அவ்வளவு தேவை உள்ளது இப்போது நம் நாட்டில் ஜி. எஸ்.டி. வந்த பிறகு எல்லாமே வரிக்குட்பட்ட வட்டத்திற்குள் வந்து விட்டதால் சிஏ படித்த ஆடிட்டர்களின் தேவை அபரிமிதமாக உள்ளது.
எனவே எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது.

நீங்கள் நடத்தும் இந்த இலவச கலந்தாய்வின் நோக்கம் என்ன?
நானும் பல மனத்தடைகளைக் கடந்த பின்புதான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். இது பற்றி பெற்றோரிடம் மாணவர்களிடம் சரியான புரிதல் இல்லை. நிறைய குழப்பங்கள் , தவறான கணிப்புகள் , சந்தேகங்கள் , மாயைகள் ,தவறான அச்சங்கள் உள்ளன.
அவை தேவை இல்லாதவை என்று எடுத்துச் சொல்லி உணர வைக்கவே இந்த கூட்டத்தை நடத்தி தெளிவு படுத்துகிறோம். இந்த பயிற்சி நிறுவனம் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் இந்த பட்டயக் கல்வி தொடர்பான இலவச கலந்தாய்வு கூட்டமொன்றை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 28 1 2018 தேதி இன்று சென்னை ஆலிவர் சாலையில் அமைந்திருக்கும் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் உள்ள கலையரங்கில் காலை பத்து மணியளவில் நடைபெறுகிறது.

Leave a Response