யூடியூப் இன்டகிரேஷன் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் அறிவிப்பு..

recover-whatsapp-images-photos

புதிய வசதியை பெற்றிருக்கும் ஐபோன் வாடிக்கையாளர்கள் இனி தங்களது வாட்ஸ்அப் சாட் திரையில் இருந்தபடியே யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும். முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் யூடியூப் வீடியோக்களை யூடியூப் செயலி அல்லது பிரவுசர்களில் சென்று பார்க்கும் வசதி வழங்கப்பட்டது.
வாட்ஸ்அப் செயலியில் யூடியூப் இன்டகிரேஷன் வசதி வாட்ஸ்அப் 2.18.11 பதிப்பில் வழங்கப்படுகிறது. இனி வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் யூடியூப் வீடியோக்களின் லின்க்களை கிளிக் செய்து வாட்ஸ்அப் செயலியை விட்டு வெளியேறாமல் வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும். இந்த அம்சத்தில் வீடியோ திரை முழுக்க பாப்-அப் ஆவதோடு பிளே (Play), பாஸ் (Pause), குளோஸ் (Close) மற்றும் ஃபுல் ஸ்கிரீன் (Full Screen) உள்ளிட்ட அம்சங்களுக்கு ஏற்ற பட்டன்களை கொண்டிருக்கிறது.

வாட்ஸ்அப் திரையில் யூடியூப் வீடியோக்களை பிளே செய்ய குறிப்பிட்ட வீடியோ லின்க்-ஐ கிளிக் செய்தாலே போதுமானது. வாட்ஸ்அப் வாடிக்கையாளருக்கு யூடியூப் வீடியோ வரும் போது யூடியூப் பட்டன் திரையில் தோன்றுகிறது. இதனால் ஒருவர் மற்றவர்களுக்கு வீடியோ பகிர்ந்து கொள்ளும் போது செயலியில் இருந்தபடியே வீடியோவை பார்க்க முடியாது.
இத்துடன் வீடியோ அளவை மாற்றியமைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும் போது யூடியூப் வீடியோ ஒன்று ஸ்மார்ட்போன் திரையின் மேல் அல்லது கீழ்பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. மேலும் இந்த வசதியில் வாடிக்கையாளர் சாட் ஸ்கிரீனை விட்டு வெளியேறி மற்றொரு சாட் ஸ்கிரீன் சென்றாலும் யூடியூப் வீடியோ தொடர்ந்து ஸ்மார்ட்போனில் ஓடுகிறது.வாட்ஸ்அப் திரையில் யூடியூப் இன்டகிரேஷன் வசதி முதற்கட்டமாக ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் அப்டேட்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response