புதிய வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் செயலி வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்ய ஏதுவாக வெளியிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் பிஸ்னஸ் ப்ரோஃபைல்ஸ், மெசேஜிங் டூல்ஸ், மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ், வாட்ஸ்அப் வெப் மற்றும் அக்கவுண்ட் டைப் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் ஆப் வெளியிடப்பட்டுள்ளது.வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் செயலியில் பிஸ்னஸ் ப்ரோஃபைல்ஸ் அம்சத்தில் வியாபார நிறுவனத்தின் முகவரி, மின்னஞ்சல் முகவரி, வலைத்தளம் மற்றும் வியாபாரம் சார்ந்த கூடுதல் தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது.
மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ் அம்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட குறுந்தகவல்களில் எத்தனை பேர் அதனை படித்தனர், எத்தனை பேருக்கு வெற்றிகரமாக குறுந்தகவல் அனுப்பப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது. வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் ஆப் முதற்கட்டமாக இந்தோனேஷியா, இத்தாலி, மெக்சிகோ, லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் மற்ற நாடுகளிலும் இந்த செயலி வழங்கப்பட இருக்கிறது.