ஆற்றுத் திருவிழா

தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் பண்டிகை தொடர்ந்து ஒருவாரம் கொண்டாடப்படும். போகி பண்டிகை, பெரும் பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் வரிசையில்.

tiruvilla

ஆற்றுத் திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இத்திருவிழா சிறப்பாக நடைபெறும். விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், கண்டரக்கோட்டை, திருக்கோவிலூர், மணலூர்பேட்டை போன்ற இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் இத்திருவிழா நடைபெறும். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் உள்ளிட்ட முக்கிய சாமிகள் ஆற்றங்கரையில் தீர்த்தவாரிக்கு வந்து செல்லும். ஆற்றில் செல்லும் நீரில் சாமிகள் நீராடிய பின் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

ஆனால் தற்போது தென்பெண்ணை ஆறு வறண்ட நிலையில் இருப்பதால் சாமிகள் நீராட முடியாத நிலையும், ஆற்றுத் திருவிழாவை மக்கள் சிறப்பாக கொண்டாட முடியாத நிலை இருந்தது. இதனால் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கடந்த 10ம் தேதி தினகரன் நாளிதழில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது ஆற்றுத் திருவிழாவிற்கு தண்ணீர் திறக்க அரசாணை இல்லை என்பதை சுட்டிகாட்டியவர்கள் பாசனத்திற்கு இம்மாத இறுதியில் திறக்கப்படும் என கூறினர். இந்நிலையில் சாத்தனூர் அணை மற்றும் ஆற்றில் ஏற்பட்டுள்ள ஊற்றுத் தண்ணீர் உபரி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டோடுகிறது. விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் அணையில் 4 மதகுகளில் சீறிப்பாய்ந்து தண்ணீர் செல்கிறது.

இதில் காணும் பொங்கலையொட்டி இளைஞர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தண்ணீர் செல்வதால் நாளை (18ம் தேதி) நடக்கும் ஆற்றுத் திருவிழா களைகட்டும் என்ற மகிழ்ச்சியில் பொதுமக்கள் உள்ளனர்.

Leave a Response