இக்கட்டான நிலையில் இந்தியா

டெஸ்டில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. 287 ரன்களை விரட்டிய நிலையில், ‘டாப் ஆர்டர்’ பேட்ஸ்மேன்களை விரைவில் இழந்து தடுமாறியது.

முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 335, இந்தியா 307 ரன்கள் எடுத்தன. போதிய வெளிச்சமின்மையால் முன்னதாக நிறுத்தப்பட்ட மூன்றாவது நாள் முடிவில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்து, 118 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. டிவிலியர்ஸ் (50), எல்கர் (36) அவுட்டாகாமல் இருந்தனர்.

இஷாந்த் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய எல்கர், டெஸ்ட் அரங்கில் தனது 9வது அரைசதம் எட்டினார். மறுமுனையில் ஷமி, அஷ்வின் பந்துகளில் பவுண்டரி அடித்தார் டிவிலியர்ஸ். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 141 ரன்கள் சேர்த்தது.

இந்நிலையில், தனது 6.1வது ஓவரில், பந்தை சற்று கூடுதலான பவுன்சருடன் வீசினார் ஷமி. இதில் சிக்கிய டிவிலியர்ஸ் (80), பார்த்திவ் படேலிடம் ‘கேட்ச்’ கொடுத்தார். தொடர்ந்து மிரட்டிய ஷமி, எல்கரை (61), அவுட்டாக்கினார். ஷமி வீசிய 10 வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் பவுண்டரி விளாசினார் குயின்டன் டி காக். 4வது பந்தில் குயின்டனை (12) அவுட்டாக்கினார் ஷமி.

Virat-Kohli2

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி, 4 ரன்னுக்கு அவுட்டாக, இந்திய அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. நான்காவது நாள் முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (11), பார்த்திவ் (5) அவுட்டாகாமல் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், கடைசி நாளான இன்று, இன்னும் 252 ரன்கள் எடுத்து இந்திய அணி வெல்லுமா

Leave a Response