ஞானவேல்ராஜாவை வீழ்த்த கூட்டணி போட்ட தயாரிப்பாளர்கள்….

Arulpathi support PM 2
டிசம்பர் 24, 2017 அன்று சென்னை செங்கல்பட்டு மாவட்டத்தின் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் இரு முக்கிய அணிகள் போட்டியிடுகின்றன. அதில் ஒன்று தற்போது அச்சங்கத்தின் தலைவராக இருக்கும் டி.எ.அருள்பதி அவர்களின் அணி, மற்றொன்று தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜாவின் அணி. ஞானவேல்ராஜா அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், விஷால் அவர்கள் அணியில் கவ்ரவ செயலாளர் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தான் தற்போது இந்த விநியோகஸ்தர்கள் சங்கத்தில் போட்டியிடுவதால் அந்த சங்கத்தில்லிருந்து ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Arulpathi support PM
தற்போது சென்னை செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் டி.எ.அருள்பதியை ஆதரித்து தயாரிப்பாளர்கள் சிலர் ஒரு கூட்டாக சேர்ந்து இன்று இரவு சுமார் 9:45 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலைபுலி.எஸ்.தாணு, ராதாகிருஷ்ணன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தற்போதைய பொறுப்பு தலைவர் செல்வின்ராஜ், நடிகர்கள் டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர் மற்றும் சேரன், சுரேஷ் காமாட்சி மற்றும் சிலர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் பேசும்போது அருள்பதி தலைவராக இருந்து வரும் நிலையில் படங்கள் வெளியாகாமல் இருந்த நிலைகளில் அந்த படங்கள் வெளிவருவதற்கு பாடுபட்டவர் என்றனர். அருள்பதி காசுக்கு ஆசைபடாத, கறைபடியாத ஒரு நல்ல தலைவர் என்று பாராட்டினர். கலைபுலி.எஸ்.தாணு, எஸ்.வி.சேகர், செல்வின்ராஜ் ஆகியோர் பேசும் பொது கூறியதாவது, தற்போது அருள்பதி தலைமையில் இருக்கும் சங்கத்தில் கட்ட பஞ்சாயத்து நடைபெறுவதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அவை அனைத்தும் படங்கள் வெளியிடுவதர்க்கான சுமுகமான பேச்சு வார்த்தைகள் தான் என்றனர். அதிலும் அருள்பதியின் தலையீடினால் தான் ஞானவேல்ராஜாவின் ‘கொம்பன்’, கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’, ரஜினி முருகன் போன்ற படங்கள் சிக்கல்களிலிருந்து விடுப்பட்டு வெளியானது என்று பேசினார்.
Arulpathi support PM 3
நடிகர் டி.ராஜேந்தர் பேசும் போது தன்னுடைய படத்திற்கு ஒரு தனியார் தொலைகாட்சியிளிருந்து வரவேண்டிய பணத்திற்கு முன்பு இருந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தில், வசூல் செய்து தரும்படி தான் புகார் மனு கொடுத்திருந்ததாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் அப்போதைய செயலாளர் ராதாகிருஷ்ணன் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் பெற்றுத்தர முயற்சித்தும் கிடைக்கவில்லை. தற்போதுள்ள தலைவர் விஷால் மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோரிடம் இதை பற்றி சொன்னதாகவும் அவர்கள் வசூல் செய்து தருவதாகவும் தெரிவித்ததாக குறிப்பிட்டார். மீண்டும் அவர்கள் இருவரையும் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தல் அவர்கள் இருவரும் இவருடைய அழைப்பை ஏற்கவில்லை என்று குறிப்பிட்டார். டி.ராஜேந்தர் மற்றும் டி.சிவா ஆகியோரும் பேசும்போது ஞானவேல்ராஜாவிற்கு எப்போது போன் செய்து அழைத்தாலும் ஆவர் அழைப்பை எடுக்கவே மாட்டார் என்றனர்.
Arulpathi support PM 4
மற்றபடி வந்திருந்த அனைவரும் விஷாலுக்கு எதிரானவர்கள் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லாமல் புரிகிறது. காரணம் அனைவரும் வந்தது என்னவோ அருள்பதிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தான், ஆனால் முக்கியமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தை குறை சொல்லி அதுவும் குறிப்பாக விஷாலை குறை சொல்லித்தான் பேசினார்கள்.

தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் அருள்பதி மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோரை பற்றி விசாரிக்கையில், அருள்பதி தலைமையிலான விநியோகஸ்தர்கள் சங்கத்தில் கட்ட பஞ்சாயத்து நடப்பது உண்மை தான் என்றனர். அதே போல் ஞானவேல்ராஜாவை எப்போது தொடர்புகொள்ள முயற்சித்தாலும் சுளுபத்தில் தொடர்புகொள்ள முடியாது என்றனர். குறிப்பாக அவருடைய கைபேசிக்கு அழைத்தல் அழைப்பை ஏற்கமாட்டார் என்றனர். ஒரு சிலர் இருவர் பற்றியம் நல்லவிதமாக தான் சொல்கின்றனர். கட்ட பஞ்சாயத்து திரைத்துறைக்கு அவாசியம், அது இல்லாமல் படங்கள் வெளியிடுவதிலும் பழைய பாக்கி வசூல் செய்வதிலும் கடினமாகும் என்றனர். ஞானவேல்ராஜா தொடர்ச்சியாக படம் செய்துவருகிறார், தயாரிப்பாளர் சங்கத்தில் கவ்ரவ செயலாளராக இருந்தார், அப்போது அவருடைய வேலை பாலுவின் காரணமாக அவரால் கைபேசி அழைப்புகளை ஏற்கமுடியாமல் இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

டிசம்பர் 24, 2017 அன்று மாலை தெரியும் சென்னை செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் அருள்பதியா அல்லது ஞானவேல்ராஜாவா என்று? லெட்ஸ் வெய்ட் அண்ட் சீ!

Leave a Response