தமிழ் சினிமாவில் கதை திருட்டு புகார் ஒன்றும் புதுசு இல்லை. பிரபல நடிகர் அல்லது இயக்குனர் படங்கள் ரிலீஸ் நேரத்தில் இப்படி திருட்டு கதை புகார்கள் கிளம்பும்.
அதில் பல உண்மையாக இருந்தாலும் கூட பெரிய இயக்குனர்கள் , கரன்சி பலம், அதிகாரம் இப்படி ஏதாவது ஒன்றால் அந்த புகார் கிடப்பில் போடப்படும்.
இந்த புகாரும் ஒரு திருட்டு புகார்தான். இந்த முறை கதைக்கு பதில் வசனத்தை திருடி இருக்கிறார்கள்.
விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படத்தின் 2ம் பாகம் இப்போது எடுத்து வருகிறார்கள்.
தயாரிப்பு, ஹீரோ என இரண்டுமே விஷால் கவனிக்க , பட த்தை லிங்குசாமி இயக்குகிறார். படம் முழுமையும் மதுரை கதை என்பதால் மதுரை வட்டார மொழியில் வசனம் இருந்தால் நலம் என கருதியது இயக்குனர் தரப்பு. அதற்காக அங்கே தேடி இங்கே தேடி கடைசியில் கண்டு பிடித்த வசன கர்த்தா தான் வி.கே.சுந்தர்.
அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர், சினிமாவில் பி.ஆர்.ஓ., ஆர்ட்டிஸ்ட் மேலாளர், தயாரிப்பு நிர்வாகியான இவர் மிக மிக அவசரம் படத்தில் நடிகராகவும் அறிமுகமானவர்.
இவரிடம் தான் படத்திற்கு வசனம் எழுதிதர அனுகியிருக்கிறது படக்குழு. அவரும் சண்டக்கோழி 2 படத்துக்கு வட்டார மொழியில் வசனம் எழுதி கொடுத்திருக்கிறார். இதற்காக இவருக்கு பேசிய சம்பளம் 3 லட்ச ரூபாய், அட்வான்ஸ் ஆக குறிப்பிட்ட ஒரு தொகை கொடுத்து வசனத்தை எழுதி வாங்கிய இயக்குனர் லிங்குசாமி தரப்பு மீதமுள்ள முழுத்தொகை தராமலேயே ஷூட்டிங் கிளம்பி விட்டது.
பல முறை கேட்டும் பணம் வராமல் போக பிரச்சினை விஷால் கவனத்திற்கு போனது… ஆனால் அவரோ “இயக்கம் அனைத்தும் லிங்குசாமி அவர்கள் பொறுப்பில் விட்டு அதற்கான தொகை கொடுத்து விட்டேன். வசனம் எழுதிய தொகை எல்லாம் இயக்குனரிடம் தான் கேட்க வேண்டும்” என நழுவி இருக்கிறார்.
இயக்குனர் லிங்குசாமி தரப்பில் பேசும் போஸ் நிமிடத்திற்கு ஒரு காரணம் சொல்லி தவிர்க்கிறார். லிங்குசாமி தரப்பில் விசாரித்தால் அவர் வசனங்களை பயன்படுத்தவில்லை என்கிறார்கள்.
வி.கே.சுந்தர் புகார் சம்மந்தமாக இயக்குனர் லிங்குசாமியை நாங்கள் தொடர்புகொண்டு விசாரித்த போது, தான் படப்பிடிப்பில் இருப்பதாகவும், இது சம்மந்தமாக பேசவேண்டுமென்றால் இரவு தொடர்புகொள்ளும்படி தெரிவித்தார்.