ஜெருசலேம் அங்கீகரிப்பை எதிர்த்து ஐ.நா. தீர்மானம் : வீட்டோவை பயன்படுத்தி அமெரிக்கா நிராகரிப்பு!

_99100455_afp

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம் அங்கீகரிக்கும் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா நிராகரித்துள்ளது. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே எங்கு தூதரகம் அமைக்க வேண்டும் என்று மற்ற நாடுகள் அமெரிக்காவுக்கு உத்தரவிட முடியாது என்றார். ஐ.நா. தீர்மானத்தை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அவமானமாகவே கருதுவதாக குறிப்பிட்ட நீக்கி, இதனை அமெரிக்கா எளிதில் மறக்காது என்று கூறினார்.

pic (2)

இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகளை தீர்க்கும் நடைவடிக்கைகளுக்கு ஐ.நா. பாதகம் விளைவிப்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகளின் சபையின் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா நிராகரித்திருந்தாலும் 15 உறுப்பினர்களில் 14 நாடுகள் அதனை ஆதரித்து வாக்களித்துள்ளனர். இந்நிலையில் ஐ.நா. பொதுசபையில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் நாடுகளின் ஒத்துழைப்புடன் பாலதீஸ்தினம் விரைவில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Response