கிரிக்கெட் வீரர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு!

bcci_99

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அடுத்த சீசன் முதல் சம்பளம் 100 சதவீதம் அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விவாதிப்பதற்காக சுப்ரீம் கோர்ட் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகிகளின் கமிட்டி(Committee of Administrators (CoA)), வீரர்களின் சம்பள உயர்வுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

நடப்புமுறையில், பிசிசிஐக்கு வரும் ஆண்டு வருமானத்தில் 26 சதவீதம், வீரர்களுக்கு சம்பளமாக பிரித்தளிக்கப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு 13 சதவீதம், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு 10.6 சதவீதம் மீத பங்கை, வீராங்கனைகள் மற்றும் ஜூனியர் வீரர்களுக்கு தற்போது பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.CoA பரிந்துரைத்த புதிய செயல்திட்டம் அடுத்த சீசனில் அமலுக்கு வரும்பட்சத்தில், வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் சம்பளம் இருமடங்காக அதிகரிக்கும்.

201711031213183993_1_TeamIndia001-s._L_styvpf

நடப்பு ஆண்டில், 46 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, தற்போது வரை ரூ. 5.51 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால், இது ரூ.10 கோடியாக அதிகரிக்கும்.

விராட் கோஹ்லி, சர்வதேச போட்டிகள், பிரீமியர் கிரிக்கெட் போட்டிகள், ரஞ்சி தொடர் என பெரும்பாலான தொடர்களில் பங்கேற்று வருவதால், ஆண்டிற்கு ரூ.12 முதல் 15 கோடி சம்பளம் பெற்று வரும் கோஹ்லிக்கு இனி ஆண்டு சம்பளம் ரூ. 30 கோடியாக அதிகரிக்கும்.

Leave a Response