ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்க பிசிசிஐ-க்கு கேரள ஐகோர்ட் உத்தரவு!

sreesanth121

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். இவர் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சீசனில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்பட மூன்று வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் ஸ்ரீசாந்த் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனால் பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது. இதற்கிடையில் டெல்லி கோர்ட்டில் ஸ்ரீசாந்த் வழக்கு நடைபெற்றது. விசாரணை முடிவில், டெல்லி கோர்ட் ஸ்ரீசாந்தை விடுவித்தது.

ஆனால், பிசிசிஐ இவர் மீதான தடையை நீக்கவில்லை.

sreesanth

இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஸ்ரீசாந்த், ‘டெல்லி கோர்ட் என்னை 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந்தேதி குற்றமற்றவர் என்று வழக்கில் இருந்து விடுவித்த பின்னரும், பிசிசிஐ எனக்கு வாழ்நாள் தடைவிதித்துள்ளது. இந்த தடையை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரி கேரள மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Leave a Response