சமுத்திரக்கனி நடிப்பில் ‘ஏமாலி’ டீரெய்லர் இதோ!

Yemali_18507

சமுத்திரக்கனி தற்போது நடித்து வரும் படம் ‘ஏமாலி’. இந்தப் படத்தின் முதலாவது டீரெய்லர் சற்றுமுன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

 

இந்தப் படத்தில் சமுத்திரக்கனியுடன் சாம் ஜோன்ஸ் என்ற புதுமுக ஹீரோ நடிக்கிறார். கதாநாயகியாக ‘காதல் கண் கட்டுதே’ படத்தில் நடித்த அதுல்யா ரவி நடிக்கிறார். மேலும், படத்தில் பால சரவணன், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப்படத்தை வி.இசட்.துரை இயக்குகிறார். ‘லதா புரொடக்ஷன்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரித்து வருகிறது.

வி.இசட். துரை இயக்கும் ‘ஏமாலி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்திருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை எம்.ரத்திஷ் கண்ணா, பிரகாஷ் இருவர் கவனிக்கின்றனர். சாம்டி.ராஜ் ‘ஏமாலி’ படத்திற்கு இசை அமைக்கிறார்.

 

படத்தின் டீரெய்லர்:

 

‘ஏமாலி’ படத்தின் முதல் டீரெய்லர் சற்றுமுன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் டீசரை சமீபத்தில்  நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஏமாளியா ஏமாலியா ‘ஏமாலி’ என்ற தலைப்பு முன்பே சர்ச்சைக்குள்ளானது. ஏமாலி என்பது தவறான வார்த்தை. ‘ஏமாளி’ என்பதே சரியான வார்த்தை என ஒருவர் இந்தத் தவறைச் சுட்டிக்காட்டி ட்வீட் செய்திருந்தார். தெரிந்தேதான் அந்தப் பெயர் அதோடு இயக்குநர் வி.இசட்.துரைக்கும் மெஸேஜ் அனுப்பினார். அதற்கு, தெரிந்தேதான் ‘ஏமாலி’ என்று பெயர் வைத்துள்ளேன். படத்தில் இதற்கான காரணம் இருக்கிறது என்று பதில் கூறியிருக்கிறார் இயக்குனர் வி.இசட்.துரை.

 

Leave a Response