சென்னை மக்களை அலறவிடும் வேலூர் ஜோதிடரின் பஞ்சாங்கம்- உண்மையா பொய்யா?

nnnnnnnnnnnnnnn

ஓகி புயல் தென்மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. கனமழை, சூறாவளிக் காற்றால் கன்னயாகுமரி மாவட்டம் உருக்குலைந்துள்ளது. பாதிப்புகளில் சிக்கியுள்ள குமரி மாவட்டம் இருளில் சிக்கித் தவிக்கிறது.

புயல் குறித்த முன் அறிவிப்புகளை ஒரு பக்கம் தொழில்நுட்பங்களை வைத்து வானிலை மையம் கணித்து வருகிறது. மற்றொரு புறம் புயல், வெள்ள பாதிப்பு குறித்த பஞ்சாங்க குறிப்பும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

panjjakam

அந்த பஞ்சாங்கப் பிரதியில் அதிகமான சூறாவளி காற்று வீசும். மழையால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழியும், அனைத்து ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி பாதிக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. உப்பளம் பாதிக்கும் அந்தமான் காற்றழுத்த தாழ்வுமண்டல்ம் 1510 கிமீ புயல் வீசும் குண்டாறு அணை பாதிக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் உள்ளது.

puyal1

உலகத்தில் அசுப செயல்கள் அதாவது அசம்பாவிதங்கள் நடக்கும். குளிர்காற்று, கடல் கொந்தளிப்பு ஏற்படும். காற்றழுத்த தாழ்வு கடலூர் 1550 கி.மீட்டரில் உருவாகும். அக்னி பயம். கடலூர்,ராமேஸ்வரம் பாதிக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த பஞ்சாங்கம் வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தை ஜோதிடர் கே.என். நாராயணமூர்த்தி வெளியிட்டு வருவதாக தெரிகிறது. இதில் சென்னை வாசிகளுக்கு ஷாக்கான விஷயம் என்னவென்றால் டிசம்பர் 9 முதல் 12 வரை சென்னையில் கனமழை பெய்யும், நகரம் வெள்ளத்தில் மிதக்கும், மின்சாரம் இருக்காது என்பது தான். மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் இந்த பஞ்சாங்கம் சொல்வது உண்மையா என்பது டிசம்பர் 9ம் தேதிக்குப் பிறகே தெரியும்.

Leave a Response