வெற்றி மழையில் விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’…

large_annadurai-movie-08-33806

விஜய் ஆண்டனி நடிப்பில் ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `அண்ணா துரை’ விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக டயானா சம்பிகா, மஹிமா நடித்திருக்கின்றனர். ராதாரவி,காளி வெங்கட், நளினிகாந்த், ஜுவல் மேரி, ரிந்து ரவி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். தில்ராஜ் ஒளிப்பதிவில், ஆனந்த மணி கலை இயக்கத்தில், ராஜசேகர் சண்டைப் பயிற்சியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு சக்திவேல் பாடல்களை எழுதியுள்ளார்.

`அண்ணா துரை’ திரைப்படம் நவம்பர் 30-ஆம் தேதி வெளியானது.

Vijay_Antony

அம்மா, அப்பா, அண்ணன், தம்பி  சென்டிமெண்டை பின்னணியில் கொண்டு அண்ணாதுரை மற்றும் தம்பிதுரை ஆகிய இரட்டையர்களுக்கு இடையில் இருக்கும் பிணைப்பு தான் இந்த அண்ணாதுரை படத்தின் கரு.

விஜய் ஆண்டனி நடித்துள்ள இப் படத்தில் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி சென்டிமெண்ட்  படமாக இருக்கிறது அண்ணாதுரை படம் பார்த்ததால், ஆச்சரியம் நிறைந்ததாக இருக்கும் என்பதில்  சந்தேகமே இல்லை. பிச்சைக்காரனைப் போன்று இப்படமும் விஜய் ஆண்டனிக்கு ஹிட் படமாக அமையும் என்பதை மக்கள் வெளிப்பட கூறியுள்ளனர். முக்கியமாக பெண்கள் இப் படத்தை விரும்பி பார்க்கின்றனர். குடும்பத்துடன்
அண்ணாதுரை படத்தை திரையரங்கில் பார்த்து ரசிகர்கள் கொண்டடுகின்றனர்.

Leave a Response