ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவை: மோடி தொடங்கி வைத்தார்

metro_hyd

ஹைதராபாத்தில் 30 கிலோ மீட்டர் தொலைவு முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதில் முதல்கட்டமாக, மியாபூர் முதல் நகோலே வரையிலான 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தன. 24 ரயில் நிலையங்கள் உள்ள இந்த ரயில் பாதையில் பணிகள் முடிந்து ரயில் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஹைதரபாத்தில் இந்த பாதையில் ரயில் போக்கவரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அவருடன், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், அமைச்சர்கள், அதிகாரிகள் பயணம் செய்தனர். 12 கிலோ மீட்டர் பயண தூரத்தை மெட்ரோ ரயில் 10 நிமிடங்களில் கடந்தது.

இந்த மெட்ரோ ரயில்பாதையில் பயணிகளுக்கான போக்குவரத்து நாளை தொடங்குகிறது. குறைந்தபட்ச தூரத்திற்கான கட்டணம் 10 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 60 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Response