மக்கள் போராட்டத்தில் குதித்ததால் அமைச்சர்கள் ஓட்டம்!

eri1

சமீபத்தில் பெய்த மழையால், ரெட்டை ஏரி முழுமையாக நிரம்பி, தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. மேலும் கூடுதல் நீரை வெளியேற்ற, புழல் எம்.ஜி.ஆர்., நகர், 4வது தெரு சந்திப்பில், ரெட்டை ஏரி கரையை உடைக்க, பொதுப்பணித்துறையினர் நேற்று முயன்றனர்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் திரண்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகளை தடுத்தனர். மேலும் கரையை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த புழல் போலீசார், இரு தரப்பினரிடம் பேச்சு நடத்தினர். இந்நிலையில் ஏரிக்கு அருகே வெள்ளத்தில் மூழ்கிய அறிஞர் அண்ணா நகர் பகுதிக்கு, உணவுத்துறை மற்றும் ஊரகத்துறை அமைச்சர்கள் காமராஜ், பெஞ்சமின் ஆகியோர் ஆய்வுக்கு சென்றனர்.

eri

அங்கிருந்த அ.தி.மு.க.,வினர் ஏரிக்கரையை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தும் தகவலை அமைச்சர்களிடம் தெரிவித்தனர். மேலும் அங்கு சென்று அவர்களை சமாதானம் செய்ய அழைத்தனர். ஆனால், மிரண்டு போன அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதியின் ஆய்வை அவசரமாக முடித்துக் கொண்டு வந்த வழியே திரும்பி சென்றனர்.

Leave a Response