2வது நாளாக செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம்…!  

 

ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் டிஎம்எஸ் உள்ளிருப்பு 2 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 11 ஆயிரம் செவிலியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் தரவரிசை, மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமிக்க பட்டுள்ளனர். ஆனால் பணி நியமனம் செய்யும் போது ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

6ba96136c668816e3ee8acbbe4cc3224

செவிலியர்களுக்கு ரூ.7,700 தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து நர்சுகள் பணியாற்றினர். ஆனால் அரசு தரப்பில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று காலையில் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ஒன்று கூடினர். தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் செவிலியர்கள் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அரசுத்தரப்பில் நேற்று மாலை வரை யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.

 

செவிலியர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தப்பட்டனர். அது மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த செவிலியர்களை போலீசார் ஆங்காங்கே கைது செய்தனர். எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம். அமைச்சர் விஜயபாஸ்கர் வந்து எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் மீண்டும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்.

Leave a Response