ஆர்.கே.நகர் இடைதேர்தல்- திமுக சார்பில் மீண்டும் மருதுகணேஷ்!

maruthu

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது.

இதில் அதிமுக மற்றும் தினகரன் அணி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியான திமுக இன்று வேட்பாளரை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் கட்சின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

-marudhu4545

இதில் மருதுகணேஷை மீண்டும் களமிறக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுவார் என அறிவித்தார்.

கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது திமுக சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இந்நிலையில் அவருக்கே திமுக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.

Leave a Response