அடடா! விஷாலை கவுக்க இவ்வளவு பெரிய சதியா?

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் இந்த மாதம் 23ம் தேதி அன்று சென்னையில் உள்ள சத்யா ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. இதில் நாசர் தலைமையிலும், விஷால் முன்னிலையிலும் ‘பாண்டவர்’ அணி, பாக்யராஜ் தலைமையிலும், ஐசரி கணேஷ் முன்னிலையிலும் ‘சாமி சங்கர்தாஸ்’ அணி என இரு அணிகள் போட்டியிடுகின்றனர்.

இந்த நடிகர் சங்க உறுப்பினர்களில் பெரும்பாலானோர் நாடக நடிகர்களாவர். இந்த நாடக நடிகர்களில் பெரும்பாலானோர் சென்னையை தவிர்த்த வேறு மாவட்டங்களில் தான் உள்ளனர். குறிப்பாக மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டையில் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடக நடிகர்கள் அதிகமாக உள்ளனர்.

இவர்களை நன்கு அறிந்தவர்கள் விஷால் அணியில் உள்ள பூச்சி முருகன், ஜெரால்டு மற்றும் கருணாஸ் ஆவர். இவர்களை தவிர்த்து நாடக நடிகர்களை நன்கு அறிந்தவர் ராதாரவி. நடிகர் சங்கத்தின் நில மோசடி மற்றும் நடிகர் சங்க ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், தற்போது ராதாரவி நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே ராதாரவியினால் இந்த தேர்தலில் போட்டியிட இயலவில்லை. ஐசரி கணேஷ் அணியில் உள்ளவர்களுக்கு நாடக நடிகர்களுடனான தொடர்பு சரியாக இல்லாத காரணத்தினால், ஐசரி கணேஷ் ராதாரவியை நாடினார் என்று நாம் முந்தைய கட்டுரையில் வெளியிட்டோம்.

சில நாட்களுக்கு முன்பு விஷாலிடம் பேசிய ஐசரி கணேஷ், தான் தமிழக ஆளும் கட்சியின் பிரதிநிதியாக தான் இந்த தேர்தலில் அணியை அமைத்து போட்டியிடுவதாக தெரிவித்தார், அப்போது விஷாலை இந்த தேர்தலில் இருந்து விலகுமாறு மறைமுக மிரட்டல் விடுத்தார் ஐசரி கணேஷ் எனவும் முன்பே தெரிவித்திருந்தோம். தற்போது ஐசரி கணேஷ் அணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ராதாரவி களத்தில் இறங்கியுள்ளார். இந்த பின்னணியில் என்ன என்று நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்டோம். அதாவது இரட்டை இலக்கு லகரத்தில் அன்பளிப்பாக பணமும், ஐசரி கணேஷ் அணியினர் பெரும்பாலான பதவிகளில் வென்று நடிகர் சங்க ஆட்சிக்கு வந்தால் ராதாரவி மீது நடிகர் சங்கம் சார்பாக போடப்பட்ட அனைத்து வழக்குவளையும் வாபஸ் பெறப்படும் என்றும் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக நம்முடைய முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டோம்.

ராதாரவி சினிமா மட்டுமின்று அரசியளிலும் பங்களித்து வந்தவர் என்று அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். ராதாரவி ஒரு பழுத்த அரசியல்வாதி என்பதற்கு சாட்சியாக, அவர் திமுக, அதிமுக, என இந்த இரு காட்சிகளில் அவ்வப்போது காட்சிகளில் மாறிக்கொண்டு தன்னை பாதுகாத்து கொண்டார். சில வாரங்கள் முன்பு வரை திமுக’வில் இருந்து வந்த ராதாரவி, நயன்தாராவின் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நயன்தாராவையும், பெண்ணினத்தையும் மிக கேவலமாக பேசினார். இவருடைய அந்த பேச்சுக்கு பெரிய எதிர்ப்பு எழுந்தது. இதன் காரணமாக, ராதாரவி திமுக,வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

தற்போது வந்துள்ள தகவல்களின்படி, ராதாரவி சிக்கியுள்ள நடிகர் சங்கத்தின் நில மோசடி வழக்கில் அவர் குற்றவாளி என கூண்டில் ஏற்றப்படலாம் என சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினருக்கு திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் நாடக நடிகர், நடிகைகள் ஆதரவு அமோகமாக உள்ளதால் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக உளவுத்துறை ரிப்போர்ட் முதல்வர் மேசைக்கு சென்றுள்ளது. விஷால் அரசியலில் வரப்போவதாக முன்பே அறிவித்து, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சித்து, சில காரணங்களால் அவருடைய தேர்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. விஷால் அவ்வப்போது தமிழக அரசை விமர்சித்து வந்தார், இதை காரணம் காட்டி திரைத்துறையில் விஷாலுக்கு எதிரானவர்கள், விஷால் திமுக ஆதரவாளர், அதிமுக அரசை அவ்வப்போது விமர்சிக்கிறார், அவருடைய அணியில் திமுக ஆதரவாளர்கள் உள்ளனர், அவரால் தான் நம்முடைய திரைத்துறைக்கு பெரிய பாதிப்பு என விஷாலை குற்றம்சாட்டி வந்தனர். உண்மையில் விஷால் அணியில் இருக்கும் பூச்சி முருகன் மட்டும் தான் திமுக’வில் பிரபலமாக இருக்கக்கூடியவர்.
விஷாலின் அணியில் உள்ள பலர் அதிமுக’வில் உறுப்பினர்களாகவோ அல்லது அபிமானிகளாக இருப்பவர்கள் தான் சற்று அதிகம். விஷால் அணியினர் சென்ற முறை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்கள். அதே போல் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலிலும் விஷாலின் அணியினர் அமோக வெற்றிபெற்றனர்.

விஷாலுக்கு ஆகாத சிலர், ஆளும் கட்சியினரிடம் விஷாலை பற்றி முரண்பாடாகவே கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். இது ஆளும் கட்சிக்கு, விஷால் மீது ஒரு எரிச்சலை ஊட்டும் அளவுக்கு ஒரு கெட்ட அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது. விஷால் மீது வெறுப்பில் உள்ள ஆளும் கட்சி, விஷாலை எப்படியாவது வீழ்த்தனும் என்ற எண்ணத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலுக்கு எதிராக குரல் கொடுக்க அங்கு இருக்கும் உறுப்பினர்களை துண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.

விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்த அடித்த முயற்சி ஆரம்பித்து. விஷால் இரவு நேரத்தில் ஒரு நடிகை வீட்டிலிருந்து சுவர் ஏறி குதித்து சென்றார் என்று ஒரு பொய் பிரச்சாரம் செய்து அது சில ஊடகங்களிலும் செய்தி ஆக்கப்பட்டது. இதன் பின்னணியில் ஆளும் கட்சி இருப்பதாக அப்போது நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டது.

தற்போது விஷாலை வீழ்த்தனும் என்றால், அதற்கு சரியான ஆள் ராதாரவி தான் என்று ஐசரி கணேஷ் மற்றும் அவருடைய அணியினர் முடிவு செய்து, ராதாரவியை ஐசரி கணேஷ் சரி செய்துகொண்டார்.

ஐசரி கணேஷுடன் ராதாரவி போட்டுகொண்டு எழுதப்படாத ஒப்பந்தப்படி,ராதாரவியை ஆளும் கட்சியான அதிமுக’வில் இணைக்க வழிவகுத்தார். அதன்படி ஐசரி கணேஷ் முதலில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் பேசி, ராதாரவியை அதிமுக’வில் இணைக்க வேண்டும் என்று கேட்டுள்ளாராம். பிறகு கடம்பூர் ராஜு, ஐசரி கணேஷ் கேட்டுக்கொண்டப்படி ராதாரவியின் விருப்பத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லியுள்ளார்.

எடப்படியார் ராதாரவியின் விருப்பத்துக்கு க்ரீன் சிக்னல் கொடுக்க,ராதாரவி ஜூன் 12ம் தேதி அன்று அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் சென்று தமிழக முதல்வரும் அதிமுக’வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக’வில் தன்னை இணைத்துக்கொண்டார் ராதாரவி என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அட போங்கப்பா! நம்ம தமிழ்நாட்டில் அதிக வெப்பமும், தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்து ஆடுகிறது. இப்போது விஷாலை வீழ்த்திய தீரனும் என்று ஆளும் கட்சி பிளான் செயகிறீர்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லும்போது, அடடா! விஷாலை கவுக்க இவ்வளவு பெரிய சதியா? என சற்று சிந்திக்க வைக்கிறது.

Leave a Response