நடிகர் சங்கம் தேர்தல் நடக்கும் இடம் இங்கே தானா?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நாளை அதாவது ஜூன் 23. 2019 அன்று சென்னையிலுள்ள சதியா ஸ்டுடியோவில் அமைந்துள்ள ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரியில் நடைபெறும் என்று சென்ற வாரம் நடிகர் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் யாரோ சிலர் கொடுத்த புகார்களின் காரணமாக நடக்கவிருந்த நடிகர் சங்க தேர்தலை நடத்தக்கூடாது என்று பதிவுத்துறை அலுவலகத்திலிருந்து ஒரு நடிகர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதன் காரணமாக தேர்தல் நடைபெறாது என்று அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், நீதி மன்றத்தை நாடினார். அதன் பலனாக நடிகர் சங்க தேர்தலை சென்னையில் அதே தேதியில் நடத்தலாம் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதே சமயம், வாக்குகளை எண்ணக்கூடாது என்றும் நீதிபதி தன்னுடைய தீரிப்பில் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், ஜானகி எம்.ஜி.ஆர் கல்லூரி நடிகர் சங்கம் தேர்தல் நடத்துவதற்கு ஒப்புதல் அளித்திருந்தும், அந்த தேதியில் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு நாடகம் நடத்த அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் அங்கு தேர்தல் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்று காவல் துறை தெரிவித்ததின் காரணத்தினால், தேர்தல் நடத்துவதற்கு எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி கைவிடப்பட்டது.

தற்போது வந்துள்ள செய்தி, நடிகர் சங்க தேர்தலை 2015ம் ஆண்டு நடத்திய புனித எபாஸ் மேல்நிலை பள்ளியில் நடத்தலாம் என நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக நடிகர் சங்க தேர்தலின் சிறப்பு அலுவலரான மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதிபதி திரு. பத்மநாபனை நடிகர் சங்க தலைவர் நாசர் சந்தித்துதெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல்களை பார்க்கும் போது நடிகர் சங்கத்தின் தேர்தல் நாளை சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள புனித எபாஸ் மேல்நிலை பள்ளியில் காலை 07:30 மணி முதல் மாலை 05:30 மணி வரை நடைபெறும் என்று தெரியவருகிறது.

தேர்தலை நாளை நடத்துவது உறுதியாகிவிட்டது, வாக்கு எண்ணிக்கை எப்போது என்று நீதிமன்றம் தான் உத்திராவிட வேண்டும். இந்த இடைப்பட்ட நேரத்தில் இந்த வாக்கு பெட்டிகள் எவ்வாறு பாதுகாக்கப்பட போகிறது என்பது தான் ஒரு பெருத்த கேள்வி.

இதெல்லாம் முடிந்த பிறகு தான் யார் அணி பெரும்பான்மையான பதவிகளை வென்றது, யார் தலைவர், யார் செயலாளர், யார் பொருளாளர்,யார் யார் துணை தலைவர்கள், யார் யார் செயற்குழு உறுப்பினர்கள் என்பது தெரியவரும். இன்னும் நிறைய கூத்துகளை நாம் காணவிற்கிறோம் அப்பிடின்னு சொல்லிப்புட்டு நான் கிளம்புறேன்.

Leave a Response