இயக்குனர் பாலா இயக்கி வரும் வரும் படம் நாச்சியார். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டீசரில் போலீசாக நடிக்கும் ஜோதிகா, ஆபாச வார்த்தை ஒன்றை பேசியுள்ளார். இதுகுறித்து டீசருக்கு இணையதளத்தில் ஆதரவும், எதிர்ப்பும் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் பாலா, ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேட்டுபாளையத்தைச் சேர்ந்த ராஜன் என்பர் கோவை மாவட்ட உரிமையியல் நீதமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் “பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் நாச்சியார் பட டீரில் ஆபாச வசனம் இடம்பெற்றுள்ளது. இதை எழுதி, இயக்கிய பாலா, நடித்த ஜோதிகா மீது இந்திய தண்டனைச் சட்டம் 294 மற்றும் தகவல் உரிமைச் சட்டம் 67ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.