‘பத்மாவதி’ திரைப்பட எதிர்ப்பு நமது சுதந்திரத்தை அழிக்கும் திட்டம்: மம்தா பானர்ஜி

_92419904_gettyimages-152312882

‘பத்மாவதி’ திரைப்பட எதிர்ப்பு வெறும் துரதிஷ்டவசமானது மட்டுமல்ல, நாம் வெளிப்படுத்தும் சுதந்திரத்தை அழிக்கும் அரசியல் கட்சியின் திட்டமாகும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

பாலிவுட் இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கியுள்ள ‘பத்மாவதி’ திரைப்படத்தில் வரலாறும், வரலாற்றுக் குறிப்புகளும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடந்த வாரம் காஷ்டிரிய சமூகத்தினர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் தீபிகா படுகோன் தலைக்கு ரூ 5 கோடி அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

dee

தொடர்ந்து ‘பத்மாவதி’ திரைப்படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கும், படத்தில் நடித்த நடிகர்களுக்கும் மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ‘பத்மாவதி’ படத்திற்கு எழும் எதிர்ப்புகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டர் பக்கத்தில், ”’பத்மாவதி’ எதிர்ப்பு வெறும் துரதிஷ்டவசமானது மட்டுமல்ல, நாம் வெளிப்படுத்தும் சுதந்திரத்தை அழிக்கும் அரசியல் கட்சியின் திட்டமாகும். நாங்கள் இந்த நெருக்கடி காலத்தை எதிர்க்கிறோம். இதற்கு சினிமா துறையில் உள்ள அனைவரும் ஒருமித்து எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Response