இந்தியன் சூப்பர் லீக்- சென்னையின் எப்.சி. அணியின் முதல் ஆட்டம் வெற்றியுடன் தொடங்குமா!

large_isl-logo-pr

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 4வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன.

இன்று மாலை, சென்னையில் நடக்கவுள்ள லீக் போட்டியில், தோனி சக உரிமையாளராக உள்ள சென்னை அணி, விராத் கோஹ்லியை சக உரிமையாளராக கொண்ட கோவா அணியை எதிர் கொள்கிறது.

முதல் சீசனில் (2014) அரையிறுதி வரை சென்ற சென்னை அணி, 2015ல் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த ஆண்டு நடந்த 3வது சீசனில் ஏமாற்றிய சென்னை அணி, 7 வது இடம் பிடித்து, லீக் சுற்றோடு வெளியேறியது.

chen-vs-goa

கடந்த மூன்று சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்த மார்கோ மாட்ரசி (இத்தாலி) விலகியதால், இம்முறை முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜான் கிரிகோரி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீரர்கள்:-

கடந்த தொடர்களில் சென்னை அணிக்காக கோல் மழை பொழிந்த எலானோ (பிரேசில்), ஸ்டீவன் மெண்டோசா (கொலம்பியா) ஆகியோர் இம்முறை இடம் பெறாதது சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.இருப்பினும், கேப்டன் ஹென்றி செரினோ (போர்ச்சுகல்), காவிலன் (ஸ்பெயின்), அகஸ்டோ (பிரேசில்) உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் சாதிக்கலாம். ஜீஜே, தோய் சிங், பிக்ரம்ஜித் சிங், முகமது ரபி, ஜெர்மன்பிரீத் சிங் உள்ளிட்ட இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.

Leave a Response