கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்ணுடன் சேர்த்து காரை டோ செய்த மும்பை போலீஸ்!

தனகு உடம்பு முடியவில்லை என்று தனது மருத்துவ பரிந்துரைச் சீட்டையும் காண்பித்துள்ளார் ஜோதி மாலே என்ற அந்தப் பெண். ஆனாலும் அவரது வேண்டுதலை பொருட்படுத்தவில்லை மும்பை போலீஸ்.

அந்த  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளாது.

 

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் ஜோதி மாலே இது குறித்துக் கூறும்போது, என்னை கீழே இறங்குமாறு ஒருமுறை கூட போலீஸ் கூறவில்லை. நான் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறிய போதும் அவர்கள் கேட்கவில்லை. காரை இழுத்துச் சென்றனர்.

CaptureJPG

அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற இருகார்களை போலீஸார் கொக்கி போட்டு இழுத்துச் செல்லவில்லை, என்றார் ஜோதி மாலே.

இதனையடுத்து மும்பை போக்குவரத்து காவல் இணை கமிஷனர் அமிதேஷ் குமார் அவசர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

காரை இழுத்துச் சென்ற காவலர் ஷஷாங்க் ரானே என்று தெரிகிறது, ஆனால் அவர் சட்டையில் தன் பெயர் பேட்ஜை அணியவில்லை இது மகாராஷ்டிராவில் விதிமீறலாகும்.

Leave a Response