இனிமே பிரியாணிய வெட்டி தின்னுவோம் !

kek
நாம இதனால் வரைக்கும் உலகத்துல எத்தனையோ வகை பிரியாணிகளை சாப்பிட்டு இருப்போம் ஆனால் கேக் போல் வெட்டினால் சுடச் சுட கொட்டும் பிரியாணியை பார்த்திருக்கிறோமா. இதோ இந்த வீடியோவை பாருங்கள்.

பிரியாணி என்றாலே அது சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி அனைவரும் நாவுகளும் அதற்கு அடிமை. ஊருக்கு ஊர் பிரியாணியின் சுவை வேறுபடும்.

மூங்கில் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, மொகல் பிரியாணி என ஏராளமான வகைகள் உள்ளன. இதில் அவரவர் விருப்பம் போல் அசைவமோ சைவ உணவு பொருள்களையோ சேர்த்து சாப்பிடுவர்.

ஆனால் கேக் போல் வெட்டப்படும் ஒரு பிரியாணி குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது கேக் போன்று இருக்கும் ஒரு உணவை வெட்டினால் அதனுள் இருந்து சுடச் சுட பிரியாணி கொட்டுகிறது. மிகவும் வித்தியாசமான முயற்சி. சென்னை கிளைமேட்டிற்கு பார்க்கும் போதே எச்சில் ஊறுகிறது.

Leave a Response