‘பத்மாவதி’ திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் !

 

பாலிவுட் திரைப்படம் ‘பத்மாவதி’ தடை விதிக்ககோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள ‘பத்மாவதி’ திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாப்பாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடந்த ஜனவரியில் ‘பத்மாவதி’ படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு ஆர்பாட்டக்காரர்கள் அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கினர்.

padmavathi

இந்த விவகாரம் இந்தி திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ படத்தைத் வெளியிட தடை கோரி, சித்தார்த் சிங் உள்ளிட்ட 11 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

 

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலா அமர்வு தங்கள் உத்தரவில் கூறுகையில் ‘‘பத்மாவதி திரைப்படத்தை சென்சார் போர்டு பார்வையிட்டு உறுதி செய்துள்ளது. அந்த படத்தின் அனைத்து அம்சங்களையும் சென்போர்டு உறுதி செய்துள்ளது. எனவே அப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க எந்த தேவையும் இல்லை. எனவே ‘பத்மாவதி’ திரைப்படத்தை தடை செய்யக்கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ எனக் கூறினர்.

Leave a Response