விசாரணை கமிஷனில் பல தகவல்களை கூறுவேன்.. நடிகர் ஆனந்த் ராஜ் அதிரடி!

17-1492418806-anandraj45

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனில் ஆஜராகி பல தகவல்களை கூறுவேன் என நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான நடிகர் ஆனந்த் ராஜ் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது தீவிர விசுவாசியாகவும் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சிப் பணியில் இருந்து விலகியே உள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய அவர், சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆனபின் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆனந்த் ராஜ் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனில் ஆஜராகி பல்வேறு தகவல்களை தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் வந்தால் நிச்சயம் போட்டியிடுவேன் என்றும் நடிகர் ஆனந்த் ராஜ் கூறினார்.

Leave a Response