பாடகியாகும் சின்னத்திரை நடிகை!

usha
கனா காணும் காலங்கள் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் உஷா எலிசெபத். அதன் பிறகு அனுபல்லவி, ஒரு மனிதனின் கதை, கலாட்டா குடும்பம், வாணி ராணி உள்பட பல சீரியல்களில் நடித்தார்.

இடையில் திரைப்படங்களிலும் நடித்தார். நவீன சரஸ்வதி சபதம், வென்று வருவான் படங்கள் குறிப்பிடத்தக்கது. கடைசியாக பிரியமானவள் தொடரில் நடித்து வந்தார். தற்போது அதிலிருந்து விலகி விட்டார்.தற்போது சில படங்களில் நடித்து வரும் உஷா, தன்னை ஒரு பாடகியாக நிலைநிறுத்தவும் போராடிக் கொண்டிருக்கிறார்.

முறைப்படி இசை கற்ற உஷா தானே சொந்தமாக இசை அமைத்து பாடிய பாடல்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவாகி வருகிறது. விரைவில் திரைப்படத்திலும் பாட இருக்கிறார். நடிகையாக மட்டுமே இல்லாமல் வேறு திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக பாடி அதனை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறேன். பிரியமானவள் சீரியலில் இருந்து விலகியதற்கு முக்கிய காரணம் எதுவும் இல்லை. என்கிறார் உஷா.

Leave a Response