ரகசிய பாதாள அறையில் வைரங்கள் இருக்கலாம்- வருமான வரித்துறை!

d pannai

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரை ஒரே நாளில் சுற்றி வளைத்தது வருமான வரித்துறை. நாடு முழுவதும் 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையை தொடங்கினர். இன்று 2-வது நாளாக 150 இடங்களில் சோதனை தொடருகிறது. இந்த சோதனைகளில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது தினகரனின் புதுவை ரகசிய பண்ணை வீடுதான்.

இது தொடர்பாக தினகரன் நேற்று செய்தியாளர்களிடம் பதறிப் போய்தான் பேட்டியளித்தார். இந்த பண்ணை வீட்டி உரமும் சாணியும்தான் இருக்கும்; எதையாவது வைத்துவிட்டு பழிபோடுவார்களோ என்றெல்லாம் உதறலோடு பேசினார் தினகரன்.

இந்த பண்ணை வீட்டில் ரகசிய பாதாள அறை இருப்பதும் இந்த அறைக்கு எலக்ட்ரானிக் சாவி இருப்பதும் தெரியவந்தது. பாஸ்வேர்டு இல்லாமல் திறக்க முடியாத இந்த அறையைத்தான் இப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் குறிவைத்துள்ளனர்.

10-1510280188-password345

பல நூறு கோடி ரூபாய் வைரங்கள் அப்படி ரூ22,000 கோடி அளவுக்கு வைரங்களாக மாற்றப்பட்டு ஆங்காங்கே பதுக்கப்பட்டிருக்கின்றவாம். இதில் ஒரு பகுதிதான் தினகரனின் புதுவை ரகசிய பண்ணை வீட்டு பாதாள அறையிலும் இருக்கலாம் என வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அப்படியே வைரநகைகளை மீட்டாலும் இதை வருமான வரித்துறையினர் வெளியே சொல்வார்களா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
income

Leave a Response