பெரும்பாலான ஹரி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரியன் இன்று மதியம் 4.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
ஒளிப்பதிபாளர் பிரியன்(53) இன்று மதியம் மாரடைப்பால் திடீர் மரணம் எய்தினார். ஹரியின் பெரும்பாலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர். வெற்றிக் கொடிகட்டு, தெனாலி, சாமி, சிங்கம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இன்று மதியம் 3.30 மணிக்கு திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.