இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு முடிந்தது!           

 

201711091822350622_VVPATs-make-a-debut-over-100-glitches-in-voting-machines_SECVPF

இமாச்சல பிரதேசத்தில் இன்று சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள  68 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் வீரபத்ர சிங் மற்றும் பாஜக வேட்பாளர் பி.கே. தூமல் இடையே கடும் போட்டி  உள்ளது. காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு முடிந்தது. முதல் முறையாக யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

 

வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.  சில இடங்களில் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் சில இடங்களில் வாக்குப்பதிவு சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை  5 மணிவரை 70 சதவீத வாக்குகள் பதிவானது.  பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 18 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது

Leave a Response