சாமி ஸ்கொயர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இதோ..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சீயான் விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படத்தில் நடித்து முடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ஐஸ்வரி ராஜேஷ் ஆகியோர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த முக்கியத் தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. படத்தை வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதனை உறுதி செய்யும் விதமாக செப்டம்பர் வெளியீடு என போஸ்டரையும் வெளியிட்டு உள்ளனர். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response