கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் மோசடி புகார் மீதான விசாரணை அறிக்கை கேரள சட்டசபையில் தாக்கல்!

 

saritha

சோலார் பேனல் மோசடி புகார் மீதான விசாரணை அறிக்கையை, கேரள சட்டசபையில் முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தாக்கல் செய்தார்.

கேரளாவில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு சோலார் பேனல்கள் விற்பனை செய்ததில், தொழிலதிபர் சரிதா நாயர் மோசடி செய்ததாக கடந்த 2013ஆம் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் அன்றைய முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் விசாரணை நடத்த, உம்மன் சாண்டி ஆணையம் அமைத்தார்.

pinarayi_vijayan_16224

இதையடுத்து 2016ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பினராயி விஜயன் முதலமைச்சரானார். எனவே சிவராஜன் விசாரணை அறிக்கையை தற்போதைய முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்க, அதை அவர் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மீதும், அவரது அலுவலக அதிகாரிகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அப்போதைய உள்துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த புகார்களை சட்டப்படி சந்திப்போம் என எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.

 

Leave a Response