பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 450 கோடி எங்கே? ஸ்டாலின் கேள்வி!

23131022_880773915415813_385743253603742690_n

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு எதுவும் செய்யவில்லை எனவும் அரசு செலவிட்ட தொகை குறித்து வெள்ளை அறிக்கை தேவை எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்கள் பலவற்றிலும், புதுவையிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இதனால் கடந்த சில நாட்களாக சென்னையின் பல்வேறு இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. இந்நிலையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பெரம்பூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு எதுவும் செய்யவில்லை எனவும் அரசு செலவிட்ட தொகை குறித்து வெள்ளை அறிக்கை தேவை எனவும் வலியுறுத்தினார்.

எங்கே கமிஷன் வாங்கலாம் என்பதிலேயே அமைச்சர்கள் குறியாக இருக்கின்றனர் எனவும் பொதுப்பணித்துறைக்காக ரூ. 450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடைபெற்று வருவதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

Leave a Response