கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்: முத்தரசன்

8d4b2-cartoonist-bala

 

கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக ஆட்சியாளர்கள் மீதான கேலிச் சித்திரத்தை பொருட்டு கார்ட்டூனிஸ்ட் பாலா தமிழக அரசால் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும் மாவட்ட ஆட்சியாளரே புகார் கொடுத்திருப்பது கருத்து சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என கருதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறது.

1509873800-5941

இந்திய அரசியல் சாசனமும், நாடாளுமன்ற ஜனநாயகமும் எப்போதுமே கருத்து சுதந்திரத்தை பாதுகாத்து வருகிறது. நாட்டின் முதல் பிரதமர் நேரு துவங்கி எத்தகைய ஆட்சியாளர்களும் அரசியல் தலைவர்களும் கேலி சித்திரத்திற்கு தப்பவில்லை. பிறர் அந்தரங்கங்களில் தலையிடாத அரசியல் பண்பாடு மீறாத கேலி சித்திரங்கள் என்பது கருத்து சுதந்திரத்தின் விமர்சன வடிவம் மற்றும் நுண்ணிய அரசியல் கலை வடிவம் ஆகும். அதனை பேணி காப்பது ஆட்சியாளர்களின் கடமை ஆகும்.

ஆனால் ஆட்சியாளர்களோ ஜனநாயகம் குறித்த எத்தகைய பார்வையும் இல்லாமல் தங்களை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட எஜமானர்களாக கருதி கொண்டு மாணவர்கள் மீதும், பத்திரிக்கையாளர்கள் மீதும் கடும் சட்டங்களை பாச்சுகிறார்கள். இத்தைகைய போக்கு ஜனநாயக வழிமுறை அல்ல என்பதை சுட்டிக்காட்டுவதுடன் கார்ட்டூனிஸ்ட் பாலாவை உடனடியாக விடுதலை செய்வதோடு அவர் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்” என்று முத்தரசன் கூறியுள்ளார்.

Leave a Response