கமல் மீது வழக்கு ஒரேயொரு நடிகர் வரவேற்பு!

02-1509616791-kamal-haasan34

இந்து தீவிரவாதி என விமர்சித்ததால் நடிகர் கமல்ஹாசன் மீது வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை நடிகர் எஸ் .வி.சேகர் தமது டிவிட்டர் பக்கத்தில் வரவேற்றுள்ளார்.

இந்து தீவிரவாதி என வார இதழ் கட்டுரை ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 sv

அத்துடன் நடிகர் கமல்ஹாசன் மீது உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இச்செய்தியை குறிப்பிட்டு நடிகர் எஸ்.வி.சேகர் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

அவர் தமது பதிவில், காசிக்கு போய் கங்கையில் மூழ்கி வர இது ஒரு நல்ல சந்தர்ப்பம். வாரணாசி ஹோட்டல் ரூம்ல பைப்புல வர தண்ணி கூட கங்கை நீர்தான் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response