ட்ரம்ப்பே வந்தாலும் அதிமுக அரசை ஒன்றும் பண்ண முடியாது- சவால்விடும் அமைச்சர்!

balaji

ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:

அதிமுக ஆட்சியை விமர்சிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு எஎன்ன தகுதி இருக்கிறது. கமல்ஹாசன் டிவிட்டரில் மட்டுமே அரசியல் செய்பவர்.

 ஜெயலலிதா உயிருடன் இல்லாததால் குறுகிய காலத்தில் அரசியல் தலைவராக கமல் முயற்சி செய்கிறார். மழைக்கு நடவடிக்கை இல்லை என்று கூறும் கமல்ஹாசன் தமிழம் புயலால் பாதிக்கப்பட்ட போது எங்கே போனார்.

Stalin1

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அரசை குறை கூறுவது என்பது எதிர்க்கட்சியின் கடமை அதை செய்கிறார்கள். மத்திய அரசு எங்கள் பக்கம் இருக்கிறது என்று நான் சொல்லிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் எப்போதும் நியாயத்தின் பக்கம் உள்ளன என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Kamal-Haasan

அண்மையில் அதிமுகவின் அரசுக்கு மத்திய அரசு பக்க பலமாக இருக்கிறது. ட்ரம்ப்பே வந்தாலும் அதிமுக அரசை ஒன்றும் செய்ய முடியாது எல்லாத்தையும் மேலே இருக்குற மோடி பார்த்துக் கொள்வார் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் குறித்து விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response