மின்சாரம் தாக்கி சிறுமிகள் உயிரிழந்த விவகாரம்: அமைச்சர் முற்றுகை , தமிழிசை விளாசல் என தொடரும் பரபர..!

minsaram
கொடுங்கையூரில் அமைச்சர் ஜெயக்குமாரை பொதுமக்கள் முற்றுகை:

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என்று கூறினார். முன்னதாக உயிரிழந்த சிறுமிகளின் உடலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டனர். கொடுங்கையூரில் உள்ள மின்பெட்டிகளை உடனே சரிசெய்ய மக்கள் வலியுறுத்தினர்.

சென்னை கொடுங்கையூர் மக்கள் அபாயகரமான சூழலில் வாழ்கின்றனர்: தமிழிசை விளாசல்

சென்னை கொடுங்கையூர் மக்கள் அபாயகரமான சூழலில் வாழ்கின்றனர் என்று தமிழிசை கூறியுள்ளார். மின்கசிவுடன், கொடுங்கையூரில் உள்ள வீடுகளும் இடியும் நிலையில் உள்ளன. கொடுங்கையூரில் மின்கசிவில் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியபின் தமிழிசை பேட்டி அளித்துள்ளார். மேலும் கொடுங்கையூர் சுற்று வட்டாரத்தில் முதல்வர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.  மின்துறை அமைச்சருக்கும், அந்த துறை அதிகாரிகளுக்கும் இடையே பிரச்சனை உள்ளது என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு:

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையிட்டுள்ளார். சென்னை கொடுங்கையூரில் நேற்று 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும் 2 சிறுமிகள் உயிரிழப்பு தொடர்பாக அரசு நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Response